டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மகாபாரதத்தில் வரும் மிக முக்கியமான கதாபாத்திரம் பீஷ்மர். சினிமா கண்டுபிடிக்கப்படாத காலத்திலேயே 'பீஷ்மர்' என்ற பெயரில் இந்திய மொழிகள் அனைத்திலும் நாடகமாக நடத்தப்பட்டது. சினிமா வந்த பிறகு மவுன படங்களாக 'பீஷ்மர்' கதை படமானது. முதல் மவுன படம் 1921ம் ஆண்டு அப்போதிருந்த பிரபல இயக்குனர் ஆர்.பிரகாஷ் தயாரித்து இயக்கினார். அதன் பிறகும் இரண்டு மவுன படங்கள் உருவானது.
முதன் முறையாக பீஷ்மர் பேசியது தமிழ் படத்தில்தான். 1936ம் ஆண்டில் தமிழில் உருவான படம் 'பீஷ்மரின் பிரதிக்னா' (பீஷ்மரின் சபதம்). இந்த படத்தை பி.ஒய்.அட்லேகர் என்பவர் இயக்கினார். எம்.எஸ்.தாமோதர ராவ், சிவானந்தம், எம்.மீனாட்சிசுந்தரம், கே.ஆர்.காந்திமதி பாய், டி.எஸ்.ஜெயா, லட்சுமிநாராயண பாகவதர், 'தாடி' ஆர்.வி.கே. முதலியார், என்.சண்முகம், டி.பி.மானோஜி ராவ், பி.எஸ்.சிவபாக்யம், ஜெயலட்சுமி,கே.ஆர். லட்சுமி, சி.கே.செல்வாம்பாள், 'பேபி' எம்.ஆர்.மங்கலம் உள்ளிட்ட பலர் நடித்தனர். சேலம் பிலிம் கம்பெனி தயாரித்தது. பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 23 பாடல்கள் படத்தில் இடம்பெற்றிருந்தது. 'பீஷ்மர் முதன் முறையாக தமிழில் பேசும் படம்' என்றே படத்திற்கு விளம்பரமும் செய்யப்பட்டது.




