Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா 44 படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே

26 செப், 2024 - 10:33 IST
எழுத்தின் அளவு:
Pooja-Hegde-completes-the-shoot-of-Suriya-44


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த வரும் அவரது 44வது படத்தின் படப்பிடிப்பு சீரான இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு அந்தமான் தீவிலும் மற்றும் ஊட்டியிலும் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் பூஜா ஹெக்டே தனது காட்சிகளுக்கான படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார். இது குறித்து பூஜாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சூர்யா 44 படக்குழுவினர் தேங்க்யூ பூஜா என ஒரு மிகப்பெரிய கேக் ஒன்றை வெட்டி கொண்டாடியுள்ளனர்.

கடந்த 2022ல் பூஜாவின் வருடம் என்று சொல்லும் அளவிற்கு ராதே ஷ்யாம், பீஸ்ட், ஆச்சார்யா என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாக வலம் வந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் இதில் எந்த ஒரு படமும் அவருக்கு கை கொடுக்காத நிலையில் கடந்த வருடம் ஹிந்தியில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்த 'கிஸிகா பாய் கிஸிகி ஜான்' என்கிற ஒரு படம் மட்டுமே அவருக்கு வெளியானது. இந்த 2024ல் அவரது நடிப்பில் வெளியாகும் விதமாக படங்கள் எதுவும் இல்லை. தற்சமயம் இந்த சூர்யா 44 மற்றும் ஹிந்தியில் சாகித் கபூர் நடிப்பில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகி வரும் தேவா ஆகிய படங்கள் மட்டுமே கைவசம் இருக்கின்றன. இவை இரண்டும் 2025ல் வெளியாகும் என தெரிகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினியின் ‛வேட்டையன்' பற்றி கலை இயக்குனர் கதிர் வெளியிட்ட தகவல்ரஜினியின் ‛வேட்டையன்' பற்றி கலை ... ‛அமரன்' படத்தின் ‛ஹாய் மின்னலே...' பாடல் எப்போது ரிலீஸ்? ‛அமரன்' படத்தின் ‛ஹாய் மின்னலே...' ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)