கமல் பிறந்தநாளில் தக் லைப் பட சிறப்பு வீடியோ | ஷாலினியை தொடர்ந்து மாதவனை சந்தித்த அஜித் | விஜய் பட நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்கும் சூர்யா | அமரன் படத்தில் நடித்தது ஏன்? - வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | ‛தெறி' ஹிந்தி ரீ-மேக்கான ‛பேபி ஜான்' பட டீசர் வெளியானது | அமீர்கான் தயாரிப்பில் ‛அமரன்' பட இயக்குனர் | என்ஜிகே படத்தில் இருந்து சாய் பல்லவி வெளியேறாமல் தடுத்த தனுஷ் | விஜய் தேவரகொண்டா படத்தில் இணையும் ‛தி மம்மி' பட நடிகர் | குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைக்கும் '96' இசையமைப்பாளர் | சாதனை விலையில் 'விஜய் 69' வெளிநாட்டு உரிமை |
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர்களுக்கும், அரசுக்கும் 'கவனத்திற்கு' என்று சொல்லி சில கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
ஓடிடி தளங்களில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு 8 வாரங்களுக்குப் பிறகே அனுமதி, அடுத்த கட்ட நடிகர்களுக்கு 6 வாரங்களுக்குப் பிறகே அனுமதி என்பதுதான் அதில் முக்கிய கோரிக்கை. இதை தயாரிப்பாளர்கள் மனது வைத்தால் நிறைவேற்றித் தரலாம். ஆனால், பெரிய நடிகர்களின் படங்களாக இருந்தால் கூட ஒரு வாரம் வரை தான் தியேட்டர்களில் தாக்குப் பிடிக்கிறது. அதற்குப் பிறகு எட்டு வாரங்கள் கழித்துத்தான் ஓடிடி வெளியீடு என்றால் ஓடிடி நிறுவனங்கள் அந்தப் படங்களுக்கு நல்ல விலை கொடுக்க வாய்ப்பில்லை. அடுத்த கட்ட நடிகர்களின் சிறிய படங்கள் சில நாட்கள்தான் தாக்குப் பிடிக்கிறது. அதை 6 வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி என்பதை 2 வாரங்களுக்குப் பிறகு அனுமதித்தால் கூட ஓரளவுக்கு தயாரிப்பாளர்கள் வியாபாரம் செய்ய முடியும். இதுதான் உண்மை நிலை.
அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கைகளில், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.250 வரையும், ஏசி தியேட்டர்களுக்கு ரூ.200 வரையும், ஏசி அல்லாத தியேட்டர்களுக்கு ரூ.150 வரையும் கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும். அனுமதி கட்டணத்திலிருந்து 10 சதவீதம் பராமரிப்பு கட்டணமாக வசூலிக்க அனுமதி தர வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கைகள்.
தற்போதைய 10 சதவீதம் பராமரிப்பு கட்டணம் என்றால் 250 ரூபாய் கட்டணத்தில் 25 ரூபாய் கூடுதலாகச் சேரும். அதற்கான ஆன்லைன் முன்பதிவு கட்டணம் 40 ரூபாயும் சேர்ந்தால் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்கான ஒரு டிக்கெட் கட்டணம் ரூ.315 வரை போகும். தமிழகத்தில் தற்போதுள்ள நிலையில் ஒரு படத்திற்கு இவ்வளவு கட்டணம் கொடுத்து படத்தைப் பார்க்க மக்கள் தயாராக இருப்பார்களா என்பது சந்தேகம்தான். மேலும் 24 மணிநேர காட்சிகளுக்கும் அனுமதி கேட்டுள்ளார்கள்.
ஒரு படம் வெளியான முதல் மூன்று நாட்கள் மட்டுமே ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதன் பிறகு மிகக் குறைவான கூட்டமே வருகிறது. ஏற்கெனவே பகல் காட்சிகளுக்கு தியேட்டர்களில் குறைந்த எண்ணிக்கையில் கூட ரசிகர்கள் வருவதில்லை. அதனால் பல தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில் 24 மணிநேரமும் காட்சிகள் என்றால் யார் வருவார்கள். பெரிய நடிகர்களின் படங்களுக்கு வேண்டுமானால் ஓரிரு நாட்கள் வரலாம். சினிமாவை கொண்டாடும் தெலுங்கு மாநிலங்களில் கூட 6 காட்சிகளுக்கு தான் அரசு அனுமதி அளிக்கிறார்கள். ஒரு வேளை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கைக்கு அரசு அனுமதி அளித்தாலும் மக்கள் அதை ஏற்பார்களா?.
வழக்கம் போல அதிக விலை பாப்கார்ன், காபி, இன்ன பிற உணவு பண்டங்களின் கடுமையான விலை பற்றி திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் எந்த ஒரு கருத்தையும் சொல்லவில்லை.