Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

''தமிழ் ஐசியூ.,வுல இருக்கு; எங்க போனாலும் தலைநிமிர்ந்து தமிழ்ல பேசுங்க'': செல்வராகவன் வலியுறுத்தல்

23 செப், 2024 - 05:59 IST
எழுத்தின் அளவு:
Tamil-is-in-ICU;-Wherever-you-go,-speak-Tamil-with-your-head-held-high:-Selvaraghavans-insistence


தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் எனப் பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு ஹீரோவாக சாணிக் காயிதம், பகாசூரன் உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பர்ஹானா, மார்க் ஆண்டனி, ராயன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படங்களைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா - கோபிசந்த் மலினேனி கூட்டணியில் உருவாகும் புது படத்தில் நடிக்கிறார்.

இதனிடையே தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வரும் செல்வராகவன் அவ்வப்போது வாழ்க்கையின் தத்துவங்கள் குறித்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் குறித்தும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் இன்ஸ்டாவில் அவர் வெளியிட்ட வீடியோவில் தமிழ் மொழியின் முக்கியத்துவம் குறித்தும் அதை அழியவிடாமல் பேச வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீடியோவில் அவர் பேசியதாவது: தமிழக மக்களை நான் கெஞ்சிக் கேட்கிறேன். தமிழ் இனி மெல்லச் சாகும்ன்னு பாரதியார் சொன்னாரு. அது எந்த அளவுக்கு உண்மைன்னா தமிழ் இப்போது ஐசியூ.,வுல வெண்டிலேட்டர்ல இருக்கு. தமிழ்ல பேசுறத அவமானமா அருவருப்பா நினைக்குறாங்க. எனக்கு இங்கீலீஷ்ல பேசுறதோட அவசியம் புரியுது. ஸ்கூல்ல காலேஜ்ல இங்கீலீஷ்ல பேசமுடியாம அவமானப்பட்டு எவ்ளோ தடவை அழுதுருக்கேன், கூனி குறுகிறுக்கேன்.

அதுக்குப் பிறகு தான் ஒரு வெறி வந்துச்சு. என்ன இங்கிலீஷ் தானா? இங்கீலிஷ் புத்தகங்கள் எல்லாம் படிக்க ஆரம்பிச்சேன். அர்த்தம் தெரியாததற்கு பக்கத்துலயே டிக்ஸ்னைரி வச்சுக்கிட்டு இதுக்கு இதான் அர்த்தம் என தெரிஞ்சுகிட்டேன். கஷ்டம் தான்; ஆனால் படிக்கப் படிக்க கொஞ்சம் சரளமா பேச ஆரம்பிச்சு, ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமாவுக்கு வந்த பின்னாடி தான் ஓரளவுக்கு நல்லா பேச ஆரம்பிச்சேன்.

எங்க போனாலும் தமிழ்ல தான் பேசுவேன். நீங்களும் எங்க போனாலும் தமிழ்லயே பேசுங்க. தலைநிமிர்ந்து பேசுங்க. அவங்க உங்கள அவமானமா பார்த்தா முறைச்சுப் பாருங்க. தமிழ்ல பேசுவதை பிகர் அவமானமாக பார்த்தால் அப்படிப்பட்ட பிகரே தேவையில்லை; தூக்கி எறிங்க. தமிழ்ல பேசுற தமிழகப் பொண்ணே போதும். உலகத்துல எந்த நாட்டுக்கு வேணும்னாலும் போய் பாருங்க; அவங்களோட தாய் மொழியிலதான் பேசுவாங்க.

இங்கிலிஷ்ல சப்-டைட்டில்தான் போடுவாங்க. வெளிநாட்டுக்காரங்க தமிழ் கத்துக்கிட்டு தமிழ்ல பேசுறத பெருமையா நினைக்கிறாங்க. உலகத்துலேயே பழமையான மொழியும் தமிழ்தான். உங்களை கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இவ்வாறு பேசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ஸ்மிதாநடிகைகளே பொறாமைப்பட்ட நாயகி சில்க் ... ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ராகவா லாரன்ஸிற்கு ஜோடியாக பிரியங்கா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)