திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா | சென்னை குற்ற சம்பவ பின்னணியில் உருவான 'சென்னை பைல்ஸ்' | 'டூரிஸ்ட் பேமிலி' இடத்தை பிடிக்குமா 'ஹவுஸ் மேட்ஸ்' | பாடல் இல்லாத படம் 'சரண்டர்' | பிளாஷ்பேக்: மாதவி இரு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: 3 சகோதரிகள் இணைந்து நடித்த படம் | மோகன்லாலின் நவரச வீடியோவை வெளியிட்ட ‛மலைக்கோட்டை வாலிபன்' பட இயக்குனர் | படத்தை விமர்சிக்கும் முன் தங்கள் வீட்டு பெண்களிடம் ஒரு கேள்வியை கேளுங்கள் : ஜேஎஸ்கே இயக்குனர் ஆதங்கம் | மோகன்லாலின் நகை விளம்பரத்தை விழிப்புணர்வுக்கு பயன்படுத்திய கேரள போலீஸ் | நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஸ்வேதா மேனன் |
தமிழ் சினிமாவில் 2 கே கால கட்டங்களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் சிம்ரன். அவரும் விஜய்யும் ஜோடி சேர்ந்து நடனமாடினால் அது அசத்தலாக இருக்கும் என்பது இன்று வரையிலும் பேசப்படும் ஒன்று. இருவரும் இணைந்து “துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, யூத் (ஒரு பாடல் மட்டும்), உதயா,” ஆகிய படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர்.
இதனிடையே, சிம்ரன் அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக படம் நடித்துத் தர விஜய்யிடம் கேட்டதாகவும், விஜய் அடுத்து நடிக்க உள்ள 69வது படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது குறித்து தெரிய வந்தபின் சமூக வலைத்தளத்தில் தனது கடும் பதிலடியைப் பதிவு செய்துள்ளார் சிம்ரன்.
“உணர்வுகள் மற்றும் மனரீதியாக ஒருவரை பாதிக்க செய்யும் வகையில் சிலர் பேசுவதை பார்க்கும் போது உண்மையில் வருத்தம் அளிக்கிறது. இப்போது வரை நான் அமைதியாகவே இருக்கிறேன், ஆனால் நான் சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். நான் எந்த பெரிய ஹீரோக்களுடனும் இணைந்து பணியாற்ற ஆசைப்படவில்லை. கிடைத்த வாய்ப்புகளை செய்திருக்கிறேன். எனது இலக்குகள் எப்போதும் வேறுபட்டவை. ஒரு பெண்ணாக, எனது எல்லைகளை நான் அறிவேன்.
பல ஆண்டுகளாக சமூக ஊடகங்களில் எனது பெயரை வேறு ஒருவருடன் இணைத்து பேசும்போது நான் அமைதியாகவே இருந்தேன். ஆனால் சுயமரியாதை இங்கு முதலில் வருகிறது. 'நிறுத்து' என்பது ஒரு சக்தி வாய்ந்த வார்த்தை. அது இங்கே பயன்படுத்துவது சரியானது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க யாரும் முயற்சிக்கவில்லை. என் உணர்வுகளைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.
நான் என் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நான் எப்போதும் சரியானவற்றில் உறுதியாக நின்றேன். இத்துறையில் உள்ள விவேகமானவர்களிடம் இருந்தும் அதே நேர்மையை எதிர்பார்க்கிறேன். பொய்யான வதந்திகளைப் பரப்புபவர்கள் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என கடுமையாகப் பதிவு செய்துள்ளார்.