அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், நட்டி, அனுராக் காஷ்யப், அபிராமி, சிங்கம் புலி மற்றும் பலர் நடிப்பில். கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி வெளியான படம் 'மகாராஜா'. இப்படத்திற்குக் கிடைத்த விமர்சனங்கள், வரவேற்பு காரணமாக 100 கோடி வசூலைக் கடந்து ஓடியது. அது மட்டுமல்ல ஓடிடி தளத்தில் வெளியான பிறகு உலக அளவில் வெளிநாட்டு ரசிகர்கள் பல லட்சம் பேர் இப்படத்தைப் பார்த்தனர். அது சம்பந்தமான தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தனர்.
இப்படம் இன்று 100வது நாளைத் தொட்டுள்ளது. சென்னையில் ஒரே ஒரு தியேட்டரில், ஒரே ஒரு காட்சியாக ஓடி இப்படம் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. ஒரு காட்சி என்றாலும் ஓடிடி தளத்தில் வந்த பிறகு இன்றைய மதியக் காட்சி ஹவுஸ் புல் ஆகியுள்ளது. நாளை 90 சதவீத டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. சில படங்கள் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படங்களாக அமையும். அப்படி ஒரு படமாக இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க ஒரு வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படமாக இந்தப் படம் சினிமா வரலாற்றில் பதிவு செய்யப்படும்.