மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் கடந்த பல மாதங்களாக 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வந்தார். இதில் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கசன்டரா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார். விடாமுயற்சி படப்பிடிப்பு இடைவெளி விட்டு நடந்து வந்தது. இதனால் அஜித் தனது அடுத்த படமான ‛குட் பேட் அக்லி'-ல் நடித்து வந்தார். அதன்பிறகு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அஜித் கடந்த மாதத்தில் விடாமுயற்சி மீதமுள்ள காட்சிகளை நடித்து கொடுத்தார். இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றதாக கூறப்பட்டு வந்தது. ஆனால் இந்த படத்தில் இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் மீதமுள்ளதாம். இதனை முதலில் ரஷ்யாவில் படமாக்க திட்டமிட்டனர். இப்போது இந்த பாடல் காட்சியை வருகின்ற வாரத்தில் இத்தாலியில் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.