ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆக்ஷன் ஹீரோயின்கள் இருந்திருக்கிறார்கள். விஜயலலிதா முதல் விஜயசாந்தி வரை ஒரு பெரிய பட்டியல் இருக்கிறது. ஆனால் இப்போது எல்லா ஹீரோயின்களுமே ஆக்ஷன் ஹீரோயின்கள் தான்.
தமிழ் சினிமாவின் முதல் ஆக்ஷன் ஹீரோயின் எஸ்.டி.சுப்புலட்சுமி, புராணபடங்களிலும், பக்தி படங்களிலும், சரித்திர படங்களிலும் நடித்து வந்த எஸ்.டி.சுப்புலட்சுமி 'நவீன சதாராம்' என்ற படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்தார். சதாராம் என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த சுப்புலட்சுமி ஆண் வேடமிட்டு பல சாகசங்களை செய்பவராக நடித்திருந்தார். அவரது வீர தீர செயல்களை பார்த்து அந்த நாட்டு இளவரசிக்கு காதல் வரும். அவர் ஆண் என்பது தெரியாமல் காதலிப்பார். ஆனால் சதாராம் இளவரசனை காதலிப்பார். இதற்கு இடையில் திருடன் ஒருவரும் சதாராமை காதலிப்பார். இப்படி போகும் கதையின் முடிவு என்ன என்பது கிளைமாக்ஸ்.
இந்த படத்தை கே.சுப்ரமணியம் இயக்கி இருந்தார். வித்வான் சங்கரலிங்கம் இளவரசனாகவும், பட்டு அய்யர் திருடனாகவும், கே.கே.பார்வதி பாய் இளவரசியாகவும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இசை அமைத்திருந்தார். 1935ம் ஆண்டு வெளியான இந்த படம் 'சதாராமே' என்ற பிரபலமான கன்னட நாடகத்தின் ரீமேக் ஆகும்.




