ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
தமிழில் பேட்ட, மாஸ்டர், தங்கலான் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகையான மாளவிகா மோகனன். தற்போது ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்துள்ளார். சித்தாந்த் சதுர்வேதி, ராகவ் ஜூயல் ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். ரவி உதய்வர் இயக்கி உள்ளார். அதிரடி ஆக் ஷன் கதையில் உருவாகி உள்ள இந்த படம் வரும் செப்., 20 ல் வெளியாகிறது.
வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் இவர், யுத்ரா படத்தில் முத்தக்காட்சி மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சினிமாவில் நெருக்கமான மற்றும் முத்தக்காட்சிகளில் நடிப்பது எளிதல்ல. நடிகர், நடிகை இடையே நல்ல புரிதல் மற்றும் சவுகரியமான சூழல் இருக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற காட்சிகளில் நடிக்க படப்பிடிப்பு தளத்தில் ‛இன்டிமேட் கோ ஆர்டினேட்டர்' ஒருவர் இருப்பார். நடிகர்கள் கூச்சமின்றி நடிக்க அவர்களுக்கு இவர்கள் உதவுவார்கள். ஆனால் எங்கள் படப்பிடிப்பில் அப்படி யாரும் இல்லை. இருப்பினும் நானும், சித்தாந்தும் எப்படியோ நடித்துவிட்டோம்'' என்கிறார்.