ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற பாடலான 'ரத்தமாரே' பாடலை தலைப்பாக கொண்டு தற்போது ஒரு படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை டிஎஸ்எஸ் ஜெர்மனி மற்றும் நியூஜெர்சி வி2 நிறுவனங்கள் சார்பில் 13 இலங்கை தமிழர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். தினேஷா ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விபின் இசை அமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் தினேஷா ரவிச்சந்திரன் கூறும்போது “அச்சம், மடம், பயிர்ப்பு என்ற மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை, அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம். என் வாழ்வில் நான் பார்த்த என்னை பாதித்த, இந்த சமூகத்தில் மாறவேண்டிய, மாற்றவேண்டிய சில முக்கிய சம்பவங்களை இதில் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். இந்த படத்தின் மூலம் அது மாறும் என்றும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
'ரத்தமாரே' தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம்” என்றார்.




