ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
சகோதரர்கள் இணைந்து நடிப்பது சினிமாவிற்கு புதிதல்ல. எம்.ஜி.ஆர் தன் சகோதரர் சக்கரபாணியோடு இணைந்து நடித்திருக்கிறார். கமல் தன் சகோதரர் சாருஹாசன், சந்திரஹாசனோடு இணைந்து நடித்திருக்கிறார். இந்த பட்டியல் கொஞ்சம் பெருசு. ஆனால் முதன் முறையாக நான்கு சகோதரர்கள் இணைந்து நடித்த படம் 'மேனகா'.
1935ம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் அப்போது நாடக உலகில் பிரபலமாக இருந்த டிகேஎஸ் சகோதரர்கள் நான்கு பேரும் இதில் இணைந்து நடித்தனர். டி.கே.சண்முகம் நாயகனாக நடித்தார். அவருடன் டி.கே.பகவதி, டி.கே.முத்துசாமி, டி.கே.சங்கரன் ஆகியோர் மற்ற கேரக்டர்களில் நடித்தார்கள். இவர்களுடன் என்.எஸ்.கிருஷ்ணன், எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி நடித்தனர். டைட்டில் கேரக்டரான மேனகையாக எம்.எஸ் விஜயா நடித்தார். இந்த படம் மும்பையில் இருந்த ரஞ்சித் ஸ்டூடியோவில் 3 மாதங்களில் தயாரானது. படத்தின் பட்ஜெட் 80 ஆயிரம் ரூபாய்.