மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடன இயக்குனராக இருப்பவர் ஜானி. தமிழில் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். முன்னணி ஹீரோக்கள் பலரும் அவரை விரும்பி அழைத்து தங்களது படங்களுக்கு நடனம் அமைக்கச் செய்வார்கள்.
'ஜெயிலர்' படத்தில் 'காவாலய்யா', 'வாரிசு' படத்தில் 'ரஞ்சிதமே', 'திருச்சிற்றம்பலம்' படத்தில் 'மேகம் கருக்காதா', 'பீஸ்ட்' படத்தில் 'அரபிக்குத்து, ஜாலி ஓ ஜிம்கானா', 'டாக்டர்' படத்தில் 'செல்லம்மா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் 'காந்தக் கண்ணழகி', 'மாரி 2' படத்தில் 'ரவுடி பேபி', 'குலேபகாவலி' படத்தில் 'குலேபா' ஆகிய பாடல்களுக்கு நடனம் அமைத்து இங்கும் புகழ் பெற்றவர்.
21 வயதான நடனப் பெண் ஒருவரை 'பாலியல்' ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது சைபராபாத், ராய்துர்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, ஐதராபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்த போதும் நர்சிங்கி என்ற இடத்தில் உள்ள தனது வீட்டிலும் தன்னை பல முறை தாக்கியதாக அந்தப் பெண் புகார் அளித்துள்ளார். தற்போது அந்தப் புகார் அடுத்த கட்ட விசாரணைக்காக நர்சிங்கி காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஜானி மாஸ்டர் மீது, 376 (கற்பழிப்பு), 506 (குற்றவியல் மிரட்டல்), 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துவது) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலங்கானா மாநில பெண்கள் பாதுகாப்புப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் ஷிகா கோயல் இது குறித்து விசாரிக்கும்படி திரைப்பட அமைப்பினருக்கும் ஆலோசனை சொல்லியுள்ளாராம். மேலும், பாலியல் துன்புறுத்தல் பிரிவில் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல்துறையிடம் தெரிவித்துள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.