ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. கடந்த சில வருடங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று ஒரு வழியாக முடிந்தது. இப்படத்தை கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் பரவின. ஆனால், தயாரிப்பு நிறுவனம் சார்பில் இதுவரையில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'இந்தியன் 2' படம் எதிர்பாராதவிதமாக தோல்வியடைந்தது. அதிலிருந்து முற்றிலும் விலகி 'கேம் சேஞ்சர்' படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகளை ஷங்கர் ஆரம்பித்துள்ளார் என்றும் சொல்கிறார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் அவை முடியுமா என்பதும் சந்தேகம் என டோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. அதனால்தான் பட வெளியீடு குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாமல் இருக்கிறார்களாம். 2025ம் ஆண்டு பட வெளியீடு தள்ளிப் போனாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.