ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
பெங்களூருவில் கடந்த மே மாதம் நடைபெற்ற 'பார்ட்டி' ஒன்றில் போதைப் பொருட்கள் பயன்படுத்திய குற்றத்திற்காக தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட பலர் சிக்கினர். அந்த விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதன்பின் அவர் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள நகர கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பார்ட்டியில் அவர் 'எம்டிஎம்ஏ' என்ற போதைப் பொருளை உட்கொண்டதற்கான மருத்துவ சோதனை சான்றிதழ் மூலம் தெரிய வந்துள்து.
1086 பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் அந்த 'பார்ட்டி' குறித்த முழு விவரங்கள், கலந்து கொண்டவர்கள், சாட்சிகளின் ஆதாரங்கள் உள்ளிட்ட அனைத்தும் இடம் பெற்றுள்ளது எனத் தகவல். 'எம்டிஎம்ஏ, கொக்கைன், கஞ்சா உள்ளிட்ட பல போதை வஸ்துக்களை அந்த பார்ட்டியில் பயன்படுத்தியுள்ளார்களாம்.
பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களில் திரைப்படத் துறையினர் கலந்து கொள்ளும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக ஏற்கெனவே சர்ச்சைகள் உள்ளன. தெலுங்குத் திரையுலகிலும் சில பிரபலங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அடுத்து நடிகை ஹேமா கலந்து கொண்ட பார்ட்டி குறித்து தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.