டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மாமன்னன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வந்த படம் வாழை. கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உட்பட பல சிறுவர்களும் முக்கிய வேடங்களில் நடித்தனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினி, கமல் உட்பட பலரும் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தார்கள். இதன் காரணமாக சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது செப்டம்பர் 27ம் தேதி வாழை படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




