நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
ஆன்மிக பேச்சாளர் ஆன மகா விஷ்ணு தற்போது பரபரப்பான நபராகி விட்டார். அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியின்போது வெளியிட்ட சில கருத்துக்களாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர் ஒரு படத்தை இயக்கினார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.
'நான் செய்த குறும்பு' என்ற படத்தை எடுக்கப் பூஜை போட்டு, படப்பிடிப்பைத் தொடங்கினார். 'கயல்' சந்திரன், அஞ்சு குரியன் நடிப்பதாக அறிவித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் படம் டிராப் ஆனது. படத்தின் கதையும் வில்லங்கமானது. ஒரு ஆண் கர்ப்பமானால் எப்படி இருக்கும் என்பதை தான் கதை.