கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் | கடனை திருப்பி கேட்டதால் என் மீது புகார் : நாத்தனார் மீது பதில் வழக்கு தொடர்ந்த ஹன்சிகா |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்துள்ளார்.
எடிட்டர் மோகனின் இளைய மகனாக ‛ஜெயம்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ரவி. பின்னாளில் ஜெயம் ரவியாக மாறினார். தொடர்ந்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்திலும், மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். கடந்த 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
15 ஆண்டுகள் இவரது திருமண வாழ்க்கை நன்றாக சென்றது. சில மாதங்களாக இவர்கள் பிரிவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆனால் இருவரும் அதைப்பற்றி மவுனம் காத்து வந்தனர். இவர்களை சேர்த்து வைக்க குடும்பத்தினர் பேசி வந்த நிலையில் அது உடன்படாததால் இப்போது மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை : ‛‛வாழ்க்கை என்பது பல அத்தியாயங்களை கொண்ட ஒரு பயணம். மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை மற்றும் பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இது எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். எனது முன்னுரிமை எப்போதும் நடிப்பு மூலம் ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நான் என்றும் எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். உங்கள் அனைவரின் ஆதரவுக்கு நன்றி.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர்கள் இமான், ஜிவி பிரகாஷ், நடிகர் தனுஷ் ஆகியோர் தங்களது மனைவியை பிரிவதாக அறிவித்தனர். இப்போது ஜெயம் ரவியும் தனது மனைவியை பிரிந்துள்ளார்.