'தண்டட்டி' இயக்குனர் படத்தில் கவின் | அந்த மொட்டை யார் தெரியுமா? : கல்யாணி பகிர்ந்த சுவாரசிய போட்டோ | ஆவேசம் பட இயக்குனரின் கதையில் புதிய படம் இயக்கும் மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் | மோகன்லாலின் ‛ஹிருதயபூர்வம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | மோகன்லால் நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வடிவேலு | நான் வேடிக்கையாக தான் பேசினேன் : லோகேஷ் கனகராஜிடம் வருத்தம் தெரிவித்த சஞ்சய் தத் | பாதுகாப்பற்ற படப்பிடிப்பு : ஒரே ஆண்டில் இரண்டு ஸ்டன்ட் நடிகர்கள் மரணம் | நானும், அனிருத்தும் மோனிகாவின் தீவிர ரசிகர்கள் : லோகேஷ் கனகராஜ் | 4000 கோடி செலவில் 'ராமாயணா' படம்!! | சரோஜா தேவி மறைவு - வழக்கம் போல இரங்கல் தெரிவிக்காத நடிகர்கள், நடிகைகள் |
கோலிவுட்டில் பிரபலங்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது அடிக்கடி நடக்கும். ஆனால், சிறிது காலத்தில் அவர்களின் பிரிவு செய்தியை மக்கள் மறந்துவிடுவார்கள் அல்லது அது வழக்கமான ஒன்றாகிவிடும். ஒருவர் பற்றி மற்றவர் குறை சொல்வது அரிது. தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்தார்கள், விஷ்ணுவிஷால், அவர் மனைவி ரஜினியை பிரிந்தார், ஜிவி பிரகாஷ் - சைந்தவியை பிரிந்தார். ஆனால், அவர்கள் தங்கள் பார்ட்னர் பற்றி மீடியாவில் பேசியது இல்லை, சண்டை போடவில்லை.
ஆனால், ரவி மோகன், ஆர்த்தி விஷயத்தில் சில வாரங்களாக இரண்டு பேரும் மாறி, மாறி சண்டை போட்டு அறிக்கை விட்டனர். ஒரு கட்டத்தில் கோர்ட் தலையிட அவர்கள் அறிக்கை போரை நிறுத்த வேண்டிய கட்டாயம். அடுத்து இந்த விவகாரத்தில் பேசப்பட்ட பாடகி கெனிஷாவும் சில அறிக்கை விட்டார். நேற்று தங்கள் மீது தவறாக பேசும் பாடகி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆர்த்தி அப்பா போலீசில் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் எப்போது முடிவுக்கு வரும். இவர்களுக்குள் என்னதான் பிரச்னை? சட்டப்படி சில விவகாரங்கள் நடக்க, இவர்கள் மீடியா முன்பு சண்டைபோடுவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.