என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'இந்திய சினிமாவில் நீங்கதான் ராசியான ஹீரோயின்; உங்க அதிர்ஷ்டம் அப்படி' என்று நிதிஅகர்வாலை ஒரு சிலர் புகழ்கிறார்கள் அல்லது கலாய்க்கிறார்கள். காரணம், 'கலகத்தலைவன்' படத்தில் அவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார் நிதிஅகர்வால். அடுத்த சில ஆண்டுகளில் அவர் தமிழக எம்எல்ஏ ஆகி, அமைச்சர் ஆகி, இப்போது துணை முதல்வர் ஆகிவிட்டார்.
தெலுங்கில் பவன்கல்யாண் ஜோடியாக 'ஹரி ஹர வீர மல்லு' படத்தில் நடித்தார். அவரும் அரசியலுக்கு வந்து, எம்எல்ஏ ஆகி, இப்போது ஆந்திராவின் துணைமுதல்வர் ஆகிவிட்டார். உங்களுடன் நடித்தால் அந்த ஹீரோ துணை முதல்வர் ஆகிவிடுகிறார்கள். அடுத்து பிரபாசுடன் நடிக்கிறீங்க. அவர் என்ன ஆகப்போகிறாரோ என்று கேட்கிறார்கள்.
அது மட்டுமல்ல, ஹரிஹர வீரமல்லு படத்துக்கு இசையமைக்க ஒப்புக்கொண்ட பின்னர்தான் கீரவாணிக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. ஆக, நீங்க ராசியான ஹீரோயின் என்று நிதி அகர்வாலை பாராட்டுகிறார்கள். அவரோ, ''5 ஆண்டுகள் இந்த படத்துக்காக பணியாற்றினேன். எனக்கு 2 விதமான கேரக்டர். பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. படத்தின் பாடல்கள் பேசப்படுகிற நிலையில், படம் வெற்றி பெறணும். அப்பதான் நான் உண்மையில் ராசியான ஹீரோயின்'' என்கிறாராம்.