படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரும், ஆந்திர மாநில துணை முதல்வருமான பவன் கல்யாண் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஓஜி' திரைப்படம் 300 கோடி வசூலித்து வெற்றி பெற்றது. அந்தப் படத்தை இளம் இயக்குனரான சுஜித் இயக்கியிருந்தார்.
பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தை இயக்கிய இயக்குனருக்கு படத்தின் நாயகன் ஏதாவது பரிசளிப்பார். தமிழ் சினிமாவில் அப்படி கார்களைப் பெற்ற இயக்குனர்கள் சிலர் இருக்கிறார்கள். 'விக்ரம், ஜெயிலர்' ஆகிய படங்களின் இயக்குனர்கள் அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களிடமிருந்து கார்களைப் பரிசாகப் பெற்றார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தில் இப்படி இதுவரை தனது இயக்குனர்களுக்கு எந்தவிதமான கார்களையும் பரிசளிக்காத பவன் கல்யாண் முதல் முறையாக 'ஓஜி' இயக்குனர் சுஜித்திற்குக் கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்து, “இதுவே சிறந்த பரிசு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு நெகிழ்ச்சியும் நன்றியும் அடைந்துள்ளேன். எனது அன்புக்குரிய 'ஓஜி' கல்யாண்காருவிடமிருந்து கிடைத்த அன்பும் ஊக்கமும் எனக்கு எல்லாமே சிறு வயது ரசிகனாக இருந்ததிலிருந்து இந்த சிறப்பான தருணம் வரை… என்றென்றும் கடன்பட்டிருப்பேன்,” என இயக்குனர் சுஜித் குறிப்பிட்டுள்ளார்.