மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் |
சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானது. கடந்த பல வருடங்களாகவே மலையாள திரையுலகில் வாய்ப்புக்காக பல பெண்கள் பாலியல் ரீதியாக தொந்தரவுகளை அனுபவித்து வருகிறார்கள் என்று சொல்லப்பட்டு வந்த விஷயங்களை விசாரித்து அது உண்மைதான் என இந்த அறிக்கை உறுதிப்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகைகள் பலர் பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
இப்படி நீதிபதி ஹேமா கமிஷன் அமைக்கப்படுவதற்கு அழுத்தம் கொடுத்தது நடிகைகள் ரேவதி, பார்வதி, மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட சில நடிகைகள் இணைந்து உருவாக்கிய சினிமா பெண்கள் நல அமைப்புதான். அந்த வகையில் தங்களுக்கு கிடைத்த வெற்றியாக சினிமா பெண்கள் நல அமைப்பை சேர்ந்த நடிகைகள் இதை கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் நடிகை மஞ்சு வாரியர் இந்த அறிக்கை வெளியானதில் இருந்து இது குறித்து மவுனமே காத்து வந்தார். இந்த நிலையில் தற்போது இதுகுறித்து மனம் திறந்துள்ளார் மஞ்சு வாரியர்.
சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஹேமா கமிஷன் அறிக்கை குறித்தும் தற்போது மலையாள திரையுலகம் சந்தித்து வரும் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்தும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மஞ்சு வாரியர், “மலையாள திரையுலகம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியில் இருக்கிறது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். துரதிர்ஷ்டவசமாக இந்த திரையுலகை கருமேகங்கள் சூழ்ந்து இருக்கின்றன. ஆனால் அந்த மேகங்கள் விலகி ஒளிமயமான நாட்கள் வருவதற்கு காத்திருப்போம். உங்களுடைய ஆதரவு மற்றும் அரவணைப்பு காரணமாக எனக்கோ, மற்றவர்களுக்கோ அல்லது மலையாள சினிமாவுக்கொ எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.