ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ் சினிமாவில் அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத். அவர் இசையமைப்பாளராக அறிமுகமான '3' படத்தில் இடம் பெற்ற 'ஒய் திஸ் கொலைவெறி' பாடல்தான் இந்திய சினிமாவில் முதன் முதலில் 100 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்து சாதனை படைத்தது. 2012ம் ஆண்டில் அந்தப் பாடல் இந்தியத் திரையுலகத்திலும், யு டியுப் வரலாற்றிலும் ஒரு புதிய அத்தியாயம் துவங்கக் காரணமாக அமைந்தது.
அதற்குப் பின் அனிருத் இசையில் வந்த சில பாடல்கள் 100 மில்லியனைக் கடந்த பாடல்களாகவும் உள்ளன. “அரபிக்குத்து, வாத்தி கம்மிங், டானு டானு, காவாலா, வெறித்தனம், செல்பி புள்ள, தாய் கிழவி, செல்லம்மா, மாரி தர லோக்கல், மேகம் கறுக்காதா, ஆளுமா டோலுமா, குட்டி ஸ்டோரி, டிப்பம் டப்பம், ஊதுங்கடா சங்கு, பத்தல பத்தல, சொடக்கு மேல, டூ டூ டூ, ஜலபுல ஜங்கு,” ஆகிய பாடல்கள் அனிருத்தின் 100 மில்லியன் பாடல்கள்.
ஹிந்தியில் 'ஜவான்' படத்தின் மூலம் அறிமுகமானார் அனிருத். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'ஜிண்டா பண்டா, சலேயா, நாட் ராமய்யா வஸ்தாவய்யா,” ஆகிய மூன்று பாடல்கள் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தன. இவற்றில் 'சலேயா' பாடல் 400 மில்லியனைக் கடந்த ஒரு பாடல்.
தெலுங்கில் பவன் கல்யாண் நடித்த 'அஞ்ஞாதவாசி' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெறாமல் போனது. அடுத்து 'ஜெர்சி, கேங் லீடர்' ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அவற்றின் பாடல்களால் தமிழில் கிடைத்த வரவேற்பு தெலுங்கில் அவருக்குக் கிடைக்கவில்லை.
தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிக்கும் 'தேவரா 1' படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'சுட்டாமலே' பாடல் கடந்த மாதம் வெளியானது. அப்பாடல் தற்போது 100 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. தெலுங்கில் அனிருத்தின் முதல் 100 மில்லியன் பாடலாகவும் அது அமைந்துள்ளது. சிங்களப் பாடல் ஒன்றின் 'காப்பி' என அப்பாடல் பற்றி விமர்சனம் வந்தாலும் தெலுங்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.