வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரை உலகில் நடிகைகள் உள்ளிட்ட பெண்களுக்கு பாலியல் ரீதியான தொந்தரவுகள் அதிகம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள் என்றும் புகார்கள் எழுந்தன. கடந்த 2017ல் இது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான விசாரணை கமிஷன் இவை எல்லாம் உண்மைதான் என்று தற்போது வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்பட கூறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களும் நடிகர்கள் மற்றும் இயக்குனர்களில் சில ஆண்களும் உடனடியாக இந்த அறிக்கையை வரவேற்று கருத்துக்களை கூறினார் ஆனால் முன்னணி நடிகர்களான மோகன்லால் மம்முட்டி திலீப் உள்ளிட்டோர் இது பற்றி அறிக்கை வெளியிட சில நாட்கள் வரை கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தனர்.
மேலும் நடிகர் சங்க தலைவரான மோகன்லால் ஒரு தலைவராக இந்த அறிக்கை குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமலேயே தனது பதவியில் இருந்து ராஜினாமாவும் செய்தார். அதேசமயம் மோகன்லாலின் மனைவி சுசித்ராவுக்கு ஒரு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அது தொடர்பாக அவருடன் மோகன்லால் சென்னையில் இருந்து சிகிச்சைக்கான பணிகளை கவனித்து வந்தார் என்பதால் இந்த ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து அவர் உடனடியாக பதில் எதுவும் கூறவில்லை என்றும் மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரும் மலையாள தொழிலாளர் சங்க தலைவருமான இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல தான் ராஜினாமா செய்வது குறித்து முன்கூட்டியே மோகன்லால் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ள இயக்குனர் பி உன்னிகிருஷ்ணன், மோகன்லால் உள்ளிட்டோர் பொறுப்புகளில் இருக்கும்போதே இது குறித்து பதில் அளித்து இருந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் தானும் எதிர்பார்த்ததாக கூறியுள்ளார்.