அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் வேட்டையன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. அப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலியில் தற்போது நடித்து வருகிறார் ரஜினி. மேலும் சூர்யா நடித்துள்ள கங்குவா படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையனும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக வேட்டையன், கங்குவா இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகிறதா இல்லை இரண்டில் ஒரு படம் பின்வாங்குமா? என்ற கேள்வி எழுந்தது. கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தின் ஆடியோ விழாவில் பேசிய சூர்யா, அக்டோபர் பத்தாம் தேதி வேட்டையன் மட்டுமே வெளியாகிறது. கங்குவா வேறு தேதியில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் கூலி படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்ற ரஜினி மீடியாக்களை சந்தித்தபோது, வேட்டையனுக்கு வழி விட்டு சூர்யாவின் கங்குவா பின்வாங்கி இருப்பதை பற்றி அவரிடத்தில் கேள்வி எழுப்பிய போது, சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி. அவருடைய கங்குவா படம் நிச்சயம் வெற்றி பெறும். அதற்காக நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார் .
மேலும் ரஜினியிடத்தில், மலையாள நடிகைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள பாலியல் தொல்லைக்கு எதிராக ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி இருப்பது குறித்து மீடியாக்கள் கேள்வி எழுப்பியபோது, அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று பதில் கொடுத்துவிட்டு இடத்தை காலி பண்ணி விட்டார். இப்படி ரஜினி மட்டுமின்றி பல முன்னணி நடிகர்களும், கேரளா நடிகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு மற்றும் ஹேமா கமிஷன் விசாரணை குறித்து எந்த பதிலும் கொடுக்காமல் நழுவிக் கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.