‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் | வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் புதிய படங்கள் வெளியாகும் போது நள்ளிரவு காட்சிகள், அதிகாலை காட்சிகள் ஆகியவற்றிற்கு தமிழக அரசின் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2023ம் வருடம் பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்து வெளிவந்த 'துணிவு' படத்தின் அதிகாலை சிறப்புக் காட்சியின் போது சென்னையில் படம் பார்க்க வந்த 19 வயது இளைஞர் ஒருவர் லாரி மீதிருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்தார். அதன் பிறகு அதிகாலை காட்சிகள், காலை 7 மணி, 8 மணி காட்சிகள் ஆகியவற்றிற்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசு நிறுத்திவிட்டது. காலை 9 மணி முதல் தான் சிறப்புக் காட்சிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் விஜய் நடித்து இந்த வாரம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ள 'தி கோட்' படத்திற்கு அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருந்தாலும் கோயம்பத்தூரில் உள்ள ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் காலை 7 மணிக்கும், 7.40 மணிக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 11ம் தேதி வரையிலும் அந்த காட்சிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது. வேறு எந்த இடத்திலும் இப்படியான முன்பதிவு நடைபெறவில்லை. அப்படியிருக்க அந்த குறிப்பிட்ட தியேட்டரில் மட்டும் எந்தவிதமான அரசு அனுமதி பெற்று இப்படி முன்பதிவு செய்து வருகிறார்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.