பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ | பரிசு அறிவிப்பதில் நடந்த குளறுபடி : மேடையில் கண்ணீர் விட்டு அழுத நடிகை | இலங்கை சுற்றுப்பயணத்தில் கூட்டத்தில் ஒருவனாக மாறிய மகேஷ்பாபு | எதிர்ப்பு வலுத்ததால் நடிகர் சங்க போட்டியில் இருந்து விலகிய வில்லன் நடிகர் |
'புதிய கீதை' படத்திற்குப் பிறகு சுமார் 21 வருட இடைவெளியில் விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் இசையமைப்பது 'தி கோட்' படம் மூலம் நடந்துள்ளது. இத்தனை வருட காலமாக யுவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பை இயக்குனர்களும் சரி, விஜய்யும் சரி ஏற்படுத்தித் தரவில்லை.
விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற வெங்கட் பிரபு, தனது தம்பி யுவனையே 'தி கோட்' படத்திற்கு இசையமைக்க வைத்தார். அப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலைதான் தற்போது உள்ளது.
இந்நிலையில் இன்று 'தி கோட்' படத்தின் பத்திரிகையளார் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. அதை நேற்று இரவு திடீரென ரத்து செய்தார்கள். யுவனுக்காக வெங்கட் பிரபு தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்களாம்.
நாளை மறுதினம் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நான்காவது சிங்கிளை வெளியிடலாம் என்று சொன்னார்களாம். அதை ஏற்றுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் யுவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பைத் தள்ளி வைத்து, அதையும், நான்காவது சிங்கிளையும் சேர்த்தே கொண்டாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், இன்று ரத்தான சந்திப்பு நாளை மறுதினம் நடக்கும் என்பதே லேட்டஸ்ட் அப்டேட்.