திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! |
பிரபாஸ், சைப் அலிகான், கிரித்தி சனோன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் பான் இந்தியா படமாக 'ஆதி புருஷ்' வெளியானது. ராமாயணத்தைத் தழுவி, மோஷன் கேப்சரிங் முறையில் எடுக்கப்பட்ட படம் இது.
சுமார் 700 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக சொல்லப்பட்டது. ஆனால், படத்தில் இடம் பெற்ற மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம், விஎப்எக்ஸ் காட்சிகள் ஆகியவை ரசிகர்களை ஈர்க்கவில்லை. அதற்கான உருவத் தோற்றங்களும் ரசிகர்களுக்கு திருப்திகரமாக அமையவில்லை. அதனால் அப்படம் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது. தெலுங்கில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்தாகச் சொன்னார்கள்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படத்தின் இயக்குனர் ஓம் ராவத், “இந்திய சினிமாவின் தோல்விக்கான ஆதார நடிகர்கள் என சல்மான் கான், பிரபாஸ் ஆகியோரைச் சொல்லலாம். ஆனால், அவை எதுவும் பிரபாஸை பாதிக்காது. 'ஆதி புருஷ்' படத்திற்கு சில எதிர்மறை விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தெலுங்கில் மட்டுமே 200 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளது,” என்று பேசியுள்ளார்.
பிரபாஸ் பற்றி குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் 'பிளாப் - ப்ரூப்' நடிகர்கள் என்ற அர்த்தத்தில் அவர் பேசியதையும், அந்தப் படத்தின் தோல்வியை அவர் இன்னும் ஏற்கவில்லை என்பது குறித்தும் மீண்டும் ரசிகர்கள் அவரை டிரோல் செய்ய ஆரம்பித்தனர்.
சமீபத்தில்தான் 'கல்கி 2898 ஏடி' படம் பற்றி அர்ஷத் வர்சி பேசியது சர்ச்சையானது. தற்போது ஓம் ராவத் இப்படி பேசியிருப்பதும் சர்ச்சையாகி உள்ளது. பாலிவுட்டில் பிரபாஸின் தாக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதையே இது காட்டுகிறது என அவரது ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.