பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விஷால் தனது 47வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சென்னை, கீழ்ப்பாக்கத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் கூறியதாவது: 80 சதவீத பெண்கள் நடிக்க வாய்ப்புத்தேடி வந்து ஏமாற்றப்படுகிறார்கள். அவர்கள் வாய்ப்புத்தேடி செல்லும் நிறுவனங்கள் பற்றி ஆராய்ந்து செல்ல வேண்டும்; பெண்கள் சுதாரிப்புடன் இருக்க வேண்டும். கேரளாவின் ஹேமா கமிட்டி போலவே தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பிலும் 10 பேர் கொண்ட ஒரு கமிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்; விரைவில் அறிவிப்பு வெளியாகும். இது எங்களின் கடமை.
தவறான எண்ணத்தில் அழைக்கும் திரைத்துறையினர் யாராக இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் என சொன்னால் செருப்பால் அடியுங்கள். தன்னை பயன்படுத்திக்கொள்ள நடிகைகள் அனுமதிக்கூடாது. சில உப்புமா கம்பெனிகள் கேமராவை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தருவதாக கூறி போட்டோஷூட் எடுத்து, பெண்ணை பயன்படுத்திவிட்டு தப்பித்து விடுகின்றனர். இது தமிழ் சினிமாவிலும் இருப்பதை ஒப்புக்கொள்கிறேன்.
தன் மீது புகார் கூறிய ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கே தெரியாது. ஆனால் அவர் செய்த சேட்டைகள் எல்லாம் எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.