அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
குரங்கு பொம்மை படத்திற்கு பிறகு நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்த திரைப்படம் 'மகாராஜா'. இப்படம் வசூல் ரீதியாக உலகளவில் ரூ. 100 கோடியை கடந்தது.
இப்படம் விமர்சகர்கள், ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. தற்போது ஓடிடியிலும் படத்தை பார்த்துவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர். அந்தவகையில் நடிகர் சிம்பு இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டி உள்ளார். இதுபற்றி நிதிலன் அவரது சமூக வலைதள பக்கத்தில், " சிலம்பரசன் சார், மகாராஜா படத்தை பார்த்த பிறகு சந்தித்து பேசியதற்கு நன்றி. மகாராஜா படத்தை குறித்து ஆழமாக கலந்துரையாடினோம். நீங்கள் யதார்த்தம் மற்றும் ரொம்ப எளிமையாக இருந்தீர்கள். உங்களைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி'' என பதிவிட்டிருந்தார்.