படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! |
தி கோட் படத்தில் நடித்து முடித்திருக்க்கிறார் விஜய். வரும் செப்டம்பர் 5ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து எச்.வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் நடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்த படத்துடன் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு அரசியலில் பயணிக்க உள்ளார். சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்த விஜய் கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு சரியான இடம் தேடி வந்தார்.
இந்நிலையில் விக்கிரவாண்டியில் செப்டம்பர் 23ம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அனுமதி கோரி ஒரு கடிதம் கொடுத்துள்ளார். இந்த மாநாட்டில் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.