2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் |
பிக்பாஸ் போட்டியாளரான நடிகை சனம் ஷெட்டி இணையத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் , ஆன்லைன் மூலம் மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இன்று காலை எனக்கு கால் பண்ணினார்கள். அப்போது உங்கள் நம்பரில் இருந்து ஏகப்பட்ட பாலியல் மிரட்டல்கள் வந்துள்ளது. உங்கள் மீது 25க்கும் அதிகமான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் விரைவில் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினார்கள். அதோடு உங்களுடைய முழு தகவல்களை உடனடியாக தெரிவிக்கா விட்டால் உங்கள் சிம் கார்டு முடக்கப்பட்டு விடும் என்று கூறினார்கள். அப்போதுதான் சிம்கார்டு வாங்கும் போது நம்முடைய ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளோம். அப்படி இருக்கும்போது எதற்காக அந்த விவரங்களை இப்போது கேட்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டு அந்த போன் காலை கட் பண்ணி விட்டேன்.
காரணம் இதேபோன்றுதான் எனக்கு தெரிந்த ஒருவருக்கு ஒருவர் கால் பண்ணியபோது அவர்கள் அனுப்பிய லிங்கை கிளிக் செய்ததால், அவருடைய போன் ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று கூறியுள்ள சனம் செட்டி, இதுபோன்று யாராவது மர்ம நபர்கள் கால் பண்ணினால் உஷாராக இருக்க வேண்டும். அவர்கள் கேட்கும் எந்த ஒரு தகவலையும் கொடுத்து விடாதீர்கள். அவர்கள் அனுப்பும் லிங்கை யாரும் கிளிக் செய்து விடாதீர்கள். அப்படி கிளிக் செய்து விட்டால் நம்முடைய போன் ஹேக் செய்யப்படுவதோடு, பேங்க் தகவல்கள் அனைத்தையும் எடுத்து மோசடி செய்து விடுவார்கள் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்த வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.