ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கேரள மாநிலத்தில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்கள் தொடர்ச்சியாக கிளம்பிக் கொண்டிருக்கும் நிலையில் கேரளாவைச் சேர்ந்தவரும், தமிழ் நடிகருமான ரியாஸ்கான் மீது மலையாள நடிகை ரேவதி சம்பத் பாலியல் புகார் கூறினார். தனக்கு போன் செய்து “என்னோடு படுக்கையை பகிர்ந்து கொள்ள விரும்பும் உங்கள் தோழிகள் இருந்தால் கூறுங்கள்” என்று ரியாஸ்கான் கூறியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இது தமிழ் சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த புகாரை ரியாஸ்கான் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது “500 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன். 40 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். இதுவரை என் மீது யாரும் இப்படியொரு குற்றச்சாட்டை கூறியதில்லை. மனைவி, மகன்கள் என சந்தோஷமாக இருக்கிறேன். அவர்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் எப்படிப்பட்டவன் என்பது அவர்களுக்குத் தெரியும்.
என் மீது குற்றம் சொல்லும் ரேவதி சம்பத் யார் என்றே எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்ததுகூட இல்லை. போனில் பேசியதாகத்தான் அவர் கூறியுள்ளார். என் பெயரை பயன்படுத்தி யாராவது பேசி இருக்கலாம். நான்தான் பேசினேன் என்பதை அவர்தான் நிரூபிக்க வேண்டும். இது தொடர்பாக ஹேமா கமிட்டி விசாரித்தால், அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.