வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
முன்னணி கன்னட நடிகரான தர்ஷன், தனது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள், குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்ததாக சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்பவரை கூலிப்படை வைத்து படுகொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நடிகர் தா்ஷன், பவித்ரா கவுடா உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
சிறையில் உள்ள தர்ஷனை அவரது குடும்பத்தினர் சந்தித்து வருகிறார்கள். கன்னட நடிகர் சங்கம் அவர் விடுதலை அடைய யாகம் நடத்தியது. தனக்கு வீட்டு சாப்பாடு தர வேண்டும் என்று தர்ஷன் சிறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தநிலையில் சிறையில் நடிகர் தர்ஷனுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதற்கு ஆதாரமாக சிறையின் திறந்தவெளி மைதானத்தில் தர்ஷன், பிரபல ரவுடியான வில்சன் கார்டன் நாகாவுடன் அமர்ந்து பேசுவதுடன், ஒரு கையில் சிகரெட், மற்றொரு கையில் டீ கப் வைத்திருக்கும் புகைப்படம் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோன்று சிறையில் இருந்தபடியே செல்போனில் வெளியில் உள்ள ரவுடியுடன் வீடியோகால் மூலமாக பேசும் காட்சிகளும் வெளியாகின. இது தொடர்பாக மேலும் சில படங்களும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.
இதைத்தொடர்ந்து கர்நாடக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பியின் உத்தரவிரன் பேரில் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதில் தர்ஷனின் சொகுசு வாழ்க்கைக்கு உதவிய 7 சிறைத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சிறை விதிகளை மீறியதாக தர்ஷன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் சிறப்பு சலுகை வழங்கிய வழக்கு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.