'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலையும் கடந்தது. ஓடிடியில் வெளியான பின்பு ஆச்சரியப்படும் விதத்தில் உலக சினிமா ரசிகர்களையும் இப்படம் வெகுவாகக் கவர்ந்துள்ளது. வெளிநாட்டு சினிமா ரசிகர்கள் பலரும் இப்படத்தைப் பார்த்து சமூக வலைத்தளங்களில் அவர்களது கருத்துக்களைப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில், ஆங்கிலம் அல்லாத திரைப்படங்களில், தொடர்ந்து 6வது வாரமாக உலக அளவில் டாப் 10ல் இருந்து வருகிறது. இந்திய அளவில் தொடர்ந்து 6வது வாரமாக டாப் 10ல் இடம் பெற்றுள்ளது. கடந்த வாரத்தில் இப்படம் 13 லட்சம் பார்வையாளர்களால் 30 லட்சம் மணி நேரம் பார்க்கப்பட்டுள்ளது. இப்படத்தின் பார்வை எண்ணிக்கை இன்னும் சில வாரங்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்ல நெட்பிளிக்ஸ் தளத்தில், இந்த ஆண்டில் இந்தியாவில் இதுவரை வெளியான அனைத்து மொழிப் படங்களிலும் 'மகாராஜா' படம்தான் அதிகப் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளதாம். 18 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இப்படத்தைப் பார்த்துள்ளார்களாம். மற்ற ஓடிடி தளங்களில் வெளியான படங்ளுக்கும் இந்த அளவிற்கு பார்வைகள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.