காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துள்ள ‛தி கோட்' படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த டிரைலர் இதுவரை யூடியூப்பில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், இப்படத்தின் ஸ்பார்க் என்ற பாடல் வெளியானபோது அதில் விஜய்யின் டீஏஜிங் தோற்றம் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் தற்போது வெளியாகி இருக்கும் கோட் படத்தின் டீசரில் விஜய் நடித்துள்ள இரண்டு தோற்றங்களும் வரவேற்பு பெற்றுள்ளது.
குறிப்பாக இளம் வயது விஜய்யின் தோற்றம் சிறப்பாக இருப்பதாக பாராட்டப்பட்டு வருகிறது. இப்படத்தில் மைக் மோகன் வில்லன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும், இதற்கு முன்பு விஜய் நடித்த சில படங்களின் மேனரிஷத்தை படம் முழுக்க பயன்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு. முக்கியமாக சில தினங்களுக்கு முன்பு வெளியான சூர்யாவின் கங்குவா டிரைலர் கடந்த ஐந்து நாட்களில் வாங்கிய லைக்குகளை விஜய்யின் கோட் பட டிரைலர் மூன்றரை மணி நேரத்தில் முறியடித்திருக்கிறது.