லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதிஹாசன் இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் தொடர்ந்து தன்னை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக அதிக அளவில் அவர் பயன்படுத்துவது இன்ஸ்டாகிராம் கணக்கைத் தான். கிட்டத்தட்ட 26 மில்லியன் ரசிகர்கள் அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கின்றனர்.
இந்த நிலையில் தனது மொபைலில் இன்ஸ்டாகிராம் வேலை செய்யவில்லை என்றும் இதற்கு தீர்வு தெரிந்தவர்கள் தயவு செய்து உதவி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார் ஸ்ருதிஹாசன். அதே சமயம் இந்த இன்ஸ்டாகிராம் செயலியை நீக்கிவிட்டு திரும்பவும் புதிதாக பதிவு செய்யுங்கள் என்கிற யோசனையை மட்டும் யாரும் கூற வேண்டாம், ஏனென்றால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது அவரது மொபைல் போன் சாப்ட்வேர் சம்பந்தப்பட்ட பிரச்சனையா அல்லது அவரது கணக்கை திறக்க விடாமல் யாராவது விஷமிகள் அதை ஹேக் செய்து விட்டார்களா என்பது குறித்து விவரம் எதுவும் தெரியவில்லை.