சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? | ஆற்றில் குப்பையை கொட்டியதற்காக பிரபல பாடகருக்கு 25000 ரூபாய் அபராதம் |
மலையாள நடிகை நஸ்ரியா கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்து வந்தார். நேரம், ராஜா ராணி, பெங்களூர் டேய்ஸ் என குறுகிய நாட்களிலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறிய இவர், நடிகர் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு பின்னர் திருமணத்தில் இணைந்தனர். அதன் பிறகு நஸ்ரியா நடிப்பதை குறைத்துக் கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.
சமீப வருடங்களாக முக்கியமான சில படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அவர், தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் தயாராகும் படங்களின் பணிகளையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஹேர்கட் செய்துள்ள நஸ்ரியா அது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‛இப்படி ஹேர் கட் செய்த விஷயம் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான்.. என்னையோ அல்லது இந்த ஹேர் கட் செய்த தனசேகரனையோ கொன்றே விடுவார்' என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் நஸ்ரியா.