தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சிவா இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. அக்டோபர் 10ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் டிரைலர் நேற்று யு-டியுப் தளத்தில் வெளியானது.
ஒரே வீடியோ லின்க்கில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தேர்வு செய்து பார்க்கும் வசதியை ஏற்படுத்தி இருந்தார்கள். அதிகமான விஎப்எக்ஸ் காட்சிகளுடன், பிரம்மாண்டமான காட்சிகளுடன் டிரைலர் இருந்தது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நேற்று மதியம் 1 மணிக்கு வெளியான இந்த டிரைலர் தற்போது வரை 16 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சூர்யா நடித்து வெளிவந்த படங்களின் டிரைலர்களில் இது ஒரு புதிய சாதனை.
இதற்கு முன்பு சூர்யா நடித்து வெளிவந்த 'சூரரைப் போற்று' படம் 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுதான் அவரது சாதனையாக இருந்தது. அந்த சாதனையை 'கங்குவா' டிரைலர் முறியடித்துள்ளது.