ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
அறிவியல் தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கேற்ப திரைப்படத் துறையும் மாறி வருகிறது. 35 எம்எம், 70 எம்எம் உள்ளிட்ட திரை அளவுகளில் தியேட்டர்களில் சினிமாவைப் பார்த்தது ரசித்தது மாறி இன்று 'ஐமேக்ஸ்' திரை வரை வளர்ந்திருக்கிறது. சாதாரண திரைகளில் இருந்து இந்த திரை சற்று பெரிதாக இருக்கும். இன்னைக்கு ஒரு படம் ஐமேக்ஸில் வெளியானால் தான் அதை கவுரவமாக பார்க்கிறார்கள். அந்தவகையில் விஜய்யின் கோட் படம் ஐமேக்ஸ் திரையில் வெளியாகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி தயாராகி வரும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக கோட் என அழைக்கின்றனர். பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
படப்பிடிப்பு முடிந்து தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. செப்., 5ல் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்நிலையில் உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளிலும் இப்படம் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஐமேக்ஸ் தியேட்டர்கள் இப்போது தான் அதிகமாகி வருகிறது. கோட் படம் இந்திய அளவில் சுமார் 25 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிகிறது. தமிழகத்தை பொருத்தமட்டில் சென்னையில் இரண்டு ஐமேக்ஸ் திரைகள் உள்ளன. கோவையில் சமீபத்தில் ஒரு ஐமேக்ஸ் தியேட்டர் திறக்கப்பட்டது. அப்படி பார்க்கையில் கோட் படம் தமிழகத்தில் 3 ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியாகிறது.
இதற்கு முன்னர் விஜய்யின் ‛லியோ' படமும் ஐமேக்ஸ் தியேட்டரில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.