காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
சார்பட்டா பரம்பரை, அநீதி, கழுவேத்தி மூர்க்கண், நட்சத்திரம் நகர்கிறது என பல படங்களில் நடித்த துஷாரா விஜயன் , ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து மேலும் கவனம் பெற்றுள்ளார். இதையடுத்து வேட்டையன் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அவர், வீர தீர சூரன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், வேட்டையன் படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்றதும் பெரும் பயம் ஏற்பட்டு, படப்பிடிப்புக்கு முந்தைய நாள் காய்ச்சலே வந்துவிட்டது. ஒரு பக்கம் மகிழ்ச்சி, இன்னொரு பக்கம் பயம் என இரண்டும் கலந்த மனநிலையில் அவருடன் நடித்தேன். அது ஒரு கனவு மாதிரியே இருந்தது. அதோடு வேட்டையன் படத்தில் பஹத் பாசிலுடனும் இணைந்து நடித்தது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் ராயன் படத்தை போலவே வேட்டையன் படமும் என்னை பெரிய அளவில் பிரபலப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் துஷாரா விஜயன்.