அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், சித்தார்த், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த படம் 'இந்தியன் 2'. அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய இந்தப் படத்திற்கு கடுமையான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து படத்தின் வெற்றியையும், வசூலையும் பாதித்தது. நேற்று ஓடிடியில் வெளியான இந்தப் படத்திற்கு மீண்டும் அதிக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஓடிடி தளத்திலிருந்து சில பல வீடியோக்களை 'கட்' செய்து அவற்றை வைத்து 'டிரோல்' செய்தும் வருகிறார்கள்.
இதனிடையே, 'இந்தியன் 3' படம் பற்றி ஒரு தகவல் தற்போது கோலிவுட்டில் கசிந்துள்ளது. முதலில் இந்த மூன்றாம் பாகப் படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருந்தார்களாம். ஆனால், இரண்டாம் பாகத்திற்கு வந்த விமர்சனங்களை அடுத்து மீண்டும் சில காட்சிகளை 'ரீ ஷூட்' செய்யலாம் என பேசி முடிவெடுத்திருக்கிறார்களாம் என்று ஏற்கெனவே தகவல் வெளியானது.
ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் வேலைகளில் இருக்கிறார். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்திற்கு அப்படம் வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் ரிலீசுக்குப் பிறகும் சில நாட்கள் இருந்து, அதற்குப் பிறகுதான் அவர் 'இந்தியன் 3' பக்கம் வருவாராம். அதற்குள் கமல்ஹாசனும் மணிரத்னம் இயக்கி வரும் 'தக் லைப்' படத்தை முடித்துக் கொடுத்துவிடுவாராம்.
தேவைப்பட்டால் 'இந்தியன் 3'யில் சில பல மாற்றங்களைச் செய்யவும் தயாரிப்பு நிறுவனம் அனுமதி அளித்துள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. அதனால், அடுத்த வருட கோடை விடுமுறையில்தான் மூன்றாம் பாகம் வரும் என்கிறார்கள்.