விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு |
கன மழை காரணமாக கேரள மாநிலத்தில் உள்ள மலைப் பிரதேச சுற்றுலாத்தளமான வயநாட்டில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கில் உயிரிழப்பு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இழப்பு என மாநிலங்களைக் கடந்தும் துயரத்தை உணர வைத்தது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கேரள மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு பலரும் உதவிகளை அளித்து வருகின்றனர். தமிழ் நடிகர்களான விக்ரம், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா, நயன்தாரா, தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, மலையாள நடிகர்கள் மோகன்லால், மம்முட்டி, துல்கர் சல்மான், பஹத் பாசில், நஸ்ரியா, டொவினோ தாமஸ், ஆசிப் அலி உள்ளிட்ட பலரும் நிதியுதவி குறித்து அறிவித்துள்ளனர்.
ஆனால், கேரளாவில் அதிக வசூலைப் பெறும் சில முன்னணி தமிழ் நடிகர்கள், மற்ற மொழி நடிகர்கள் இன்னும் எந்தவிதமான நிதியுதவியையும் அறிவிக்காதது குறித்தும் சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர். இரங்கல் சொல்வது மட்டும் தீர்வல்ல, முடிந்தவரையில் ஏதோ ஒரு சிறு உதவி செய்தாலும் அது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் என பலரும் பதிவிட்டுள்ளனர்.
என்ன இயற்கை பேரிடர் நடந்தாலும் சிலர் கண்டு கொள்ளாமல் இருப்பதும், சிலர் உதவி செய்தாலும் அதை வெளியில் சொல்லாமல் இருப்பதும் திரையுலகத்தில் நடந்து வருகிறது.