தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சைரன் படத்தை அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. கடந்த 2016ம் ஆண்டு சக்தி சவுந்தரராஜன் இயக்கத்தில் அவர் நடித்த மிருதன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தொடங்கப் போகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் லட்சுமி மேனன், அனிகா, காளி வெங்கட் முக்கிய படங்களில் நடித்திருந்தார்கள். சாம்பிகளை மையமாகக் கொண்ட கதையில் உருவான மிருதன் படத்தின் இரண்டாம் பாகமும் அதேபோன்ற இன்னொரு மாறுபட்ட கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறுகிறார்கள். இதேபோல், கடந்த 2015 ஆம் ஆண்டு மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் படத்தில் நடித்த ஜெயம் ரவி விரைவில் அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க போகிறார்.