ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது மனதில் தோன்றும் கருத்துக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அந்த வகையில், தற்போது அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், நாம் பிறக்கும்போதே கை கால் தலை போன்று இன்னொரு விஷயமும் கூடவே பிறந்திருக்கிறது. அதுதான் பொறாமை. அடுத்தவன் மனைவி அழகாக இருந்தால் அதை பார்த்து பொறாமை. பக்கத்து வீட்டுக்காரர் கார் வாங்கினால் அதை பார்த்து பொறாமை. அலுவலகத்தில் ஒருவருக்கு பிரமோஷன் கிடைத்துவிட்டால் அதை பார்த்து பொறாமை . இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பொறாமை என்பது கேன்சர் நோய் மாதிரி. உங்கள் உடம்பில் பரவிக்கொண்டே இருக்கும். இந்த பொறாமை இல்லாமல் நாம் எப்படி வாழ்வது என்று கேட்டீர்கள் என்றால், வாழவே முடியாது. இதற்கு தீர்வு மருந்தும் கிடையாது.
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நீங்கள் மல்லுக்கட்ட மல்லுக்கட்ட அதோட பவர் அதிகமாகிக் கொண்டே இருக்கும். அதேபோல் பொறாமையை நிறுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அதோட பவரும் ஜாஸ்தியாகி கொண்டே தான் இருக்கும். அதனால் நீங்கள் பொறாமையை ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆமாம் உன்னை பார்த்தது நான் பொறாமைப்படுகிறேன். நீ என்ன செய்ய முடியும் என்று சொல்லிவிட்டு உங்கள் வேலையை கவனித்தால் கொஞ்சநாளில் மேஜிக் போல இந்த பொறாமை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் செல்வராகவன்.