புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்க்கும் பஹத் பாசில் ; இன்னொரு அஜித்தாக மாறுகிறாரா? | என் தந்தைக்கு ஏஐ குரல் வேண்டாம் ; எஸ்பிபி சரண் திட்டவட்டம் | மோகன்லாலின் 5 படங்களுக்கு மொத்தமாக ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாக்கியலெட்சுமி சீரியல் முடிவுக்கு வருகிறதா? | ‛அருண் தான் என் உலகம்' - மாற்றி மாற்றி பேசும் அர்ச்சனா | சீனாவில் விஜய் சேதுபதியின் 'மகராஜா' ரிலீஸ் : சிவகார்த்திகேயன் வாழ்த்து | கோவாவில் திருமணம் : திருப்பதியில் கீர்த்தி சுரேஷ் பேட்டி | பொங்கலுக்கு 'விடாமுயற்சி' : வேறு படங்கள் வெளிவருமா? | விஜய் - 69 : திடீரென வாங்கப்பட்ட 'பகவந்த் கேசரி' உரிமை ? | ‛எல்லாமும் கைவிடும் போது உன்னை நம்பு' - திடீரென இரவில் வெளியான விடாமுயற்சி டீசர் |
இன்று உலகம் முழுவதும் அறியப்பட்ட இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகமானது 'ரோஜா' படத்தில் என்றும் அறிமுகப்படுத்தியது 'மணிரத்னம்' என்றே பரவலாக அறியப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை அல்ல.
அதுபற்றிய ஒரு சிறிய பிளாஷ்பேக் : தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் பிறந்து மலையாள சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் ஆர்.கே.சேகர். இவரது மகன் தான் ஏ.எஸ்.திலீப்குமார். 4 வயதில் பியோனோ வாசிக்க கற்றுக் கொண்ட திலீப், தந்தையின் ஸ்டூடியோவில் அவருக்கு உதவியாக கீபோர்டு வாசித்து வந்தார். திலீப் குமாருக்கு 9 வயது இருக்கும்போது தந்தை, ஆர்.கே.சேகர் மரணமடைந்தார். அதன்பிறகு தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அவரது குடும்பம் வாழ்ந்து வந்தது.
பள்ளி கட்டணம் கட்ட முடியாமல் பிரபலமான பள்ளியில் இருந்து துரத்தி விடப்பட்ட திலீப்குமார் பின்னர் சாதாரண பள்ளியில் படித்தார். பள்ளியில் படிக்கும்போது இசை ஆல்பத்தை உருவாக்க தொடங்கினார். ஆரம்ப காலத்தில் மாஸ்டர் தன்ராஜிடம் இசை பயிற்சியை தொடங்கிய திலீப்குமார், அதன்பிறகு தனது தந்தையின் நெருங்கிய நண்பரும், மலையாள இசையமைப்பாளருமான, எம்.கே. அர்ஜூன் இசை குழுவில் கீ போர்ட் வாசிக்க தொடங்கினார். இதன்பிறகு, எம்.எஸ்.வி, விஜயபாஸ்கர், இளையராஜா, டி.ராஜேந்தர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களிடம் கீ போர்ட் பிளேயராக பணியாற்றினார். 1984-ம் ஆண்டு தனது குடும்பத்தில் இருந்த அனைவருடனும் இஸ்லாமிய மதத்திற்கு மாறினார். தனது பெயரை ஏ.ஆர்.ரஹ்மான் (அல்லா ரக்கா ரஹ்மான்) என்று மாற்றிக் கொண்டார்.
ஆரம்பத்தில் ஆவணப்படங்கள் மற்றும் விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ரஹ்மான். 1991ம் ஆண்டு, அமீர்ஜான் இயக்கத்தில் வெளியான 'வணக்கம் வாத்தியாரே' என்ற படத்தின் மூலம் பின்னணி இசை அமைப்பாளராக அறிமுகமானார். இந்த படத்தின் பாடல்களுக்கு சம்பத் செல்வம் என்பவர் இசை அமைத்திருந்தார். கார்த்திக், சரண்யா, ஜெய்சங்கர், ராதா ரவி நடித்திருந்த படம் இது.
அதனைத் தொடர்ந்துதான் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'ரோஜா படம் மூலம் பின்னனி இசை, பாடலிசை என முழுமையான இசை அமைப்பாளரர் ஆனார். ரோஜா படத்திற்காக சிறந்த இசைமைப்பாளருக்காக தேசிய விருது, மாநில விருது என 3 விருதுகளை வென்றவர் ஆஸ்கர் விருது வரைக்கும் உச்சம் தொட்டார்.