ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் படம் 'பேச்சி'. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் பேசியதாவது: இது என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் எழுதிய ஒரு பக்க கதையை நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அதுதான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம். பல கஷ்டங்களை கடந்து தான் இந்த படத்தை முடித்திருக்கிறோம்.
திகில் படம் என்பது ஒரே ஃபார்மெட்டில் தான் இருக்கும். நாங்கள் இந்த படத்தை ஆரம்பிக்கும் போது ஒரு விசயத்தில் உறுதியாக இருந்தோம், படத்தின் எந்த ஒரு காட்சியிலும் ரசிகர்கள் கவனத்தை சிதறவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான். படம் நிச்சயம் புதிய அனுபவத்தை கொடுக்கும். படத்தின் ஒலிவடிவமைப்பு, ஒளிப்பதிவு நிச்சயம் பேசப்படும். இரண்டு மணி நேரம் புதிய உலகத்திற்கு படம் அழைத்து செல்லும். என்றார்.