லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவின் ஆரம்பகட்ட ஹீரோயின்களில் முக்கியமானவர் அஞ்சலி தேவி. அன்றைக்கிருந்த அத்தனை முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்த அஞ்சலி தேவி 350 படங்களுக்கு மேல் நடித்தார். அதோடு 'அஞ்சலி பிக்சர்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 28 படங்கள் தயாரித்தார். இதில் பெரும்பாலான படங்கள் தோல்வியை சந்தித்ததால் பொருளாதார சிக்கலுக்கு ஆளானார் அஞ்சலி தேவி.
மிகுந்த மன கஷ்டத்தில் இருந்த அஞ்சலிதேவி மன நிம்மதி வேண்டி புட்டபர்த்தி சென்று சத்ய சாய்பாபாவை தரிசித்தார். அவர் முன் மனமுருகி நின்ற போது “நீங்கள் இழந்த எல்லாவற்றையும், இழந்தது போலவே பெறுவீர்கள். மீண்டும் படம் தயாரியுங்கள்” என்றார் பாபா.
அஞ்சலி தேவிக்கு அதிர்ச்சி. படம் தயாரித்துதானே இப்படி ஒரு நிலைக்கு ஆளானோம், பாபா படம் தயாரிக்க சொல்கிறாரே என்ற கலக்கத்துடன் சென்னை திரும்பிய அஞ்சலி தேவி தன் பெயரில் இருந்த ஒரு வீட்டை அடமானம் வைத்து, இருக்கிற நகைகள் அனைத்தையும் விற்று 'சதி சக்குபாய்', 'பக்த துக்காரம்' என்ற இரண்டு தெலுங்கு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். கடன்களை அடைத்தார், நகைகளை வாங்கினார், அடமானம் வைத்த வீட்டையும் மீட்டார்.
தனக்கு புதுவாழ்வு தந்த சத்ய பாபாவுக்கு ஏதாவவது கைமாறு செய்ய வேண்டும் என்று கருதிய அஞ்சலி தேவி அந்த வீட்டையே பாபாவின் ஆன்மிக அறக்கட்டளைக்கு தானமாக கொடுத்து விட்டார். அந்த வீடு இப்போதும் அடையாறில் 'சுந்தரம்' என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. ஆன்மிக சொற்பொழிவு, தியானம், பஜனைகள் நடந்து வருகிறது.
இதற்கு பிறகு சத்ய சாய்பாபாவின் வாழ்க்கையை படமாக எடுக்க அனுமதி கேட்டார் அஞ்சலி. “நான் சொல்லும்போது எடுங்கள்” என்ற பாபா 20 வருடங்களுக்கு பிறகு அனுமதி கொடுத்தார். 'சத்ய சாய்பாபா' என்ற பெயரில் தயாரான அந்த படத்தில் அஞ்சலிதேவி பாபாவின் அம்மாவாக நடித்தார்.