அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகை மீரா ஜாஸ்மின் தமிழில் ரன், சண்டக்கோழி, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தொடர்ந்து மலையாளம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடத்திலும் பிஸியான நடிகையாக மாறி படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் காதல் கிசுகிசு, பின்னர் திருமணம் ஆகியவற்றால் பட வாய்ப்புகள் குறைந்து சினிமாவை விட்டு சில வருடங்கள் ஒதுங்கினார். அதன் பிறகு தற்போது கடந்த சில வருடங்களாக மீண்டும் நடித்து வரும் மீரா ஜாஸ்மின் நடிப்பில் பாலும் பழமும் என்கிற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்த நிலையில் மலையாள குணச்சித்திர நடிகர் இர்ஷாத் என்பவர் மீரா ஜாஸ்மினுடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார்.. அது மட்டுமல்ல 'பாடம் ரெண்டு சல்லாபம்' என்கிற வார்த்தையையும் குறிப்பிட்டுள்ளார். இதை ஏன் அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது ரசிகர்கள் பலரும் அறிந்ததே.. கடந்த 2003-ல் இயக்குனர் டிவி சந்திரன் இயக்கத்தில் வெளியான ‛பாடம் ஒன்னு ஒரு விலாபம்' என்கிற படத்தில் மீரா ஜாஸ்மினின் கணவராக நடித்திருந்தார் நடிகர் இர்ஷாத்.
அந்த படம் மீரா ஜாஸ்மினுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் கேரள அரசின் மாநில விருதையும் பெற்று தந்தது. இத்தனை வருடங்கள் கழித்து இவர்கள் சந்தித்து இருப்பதும், நடிகர் இர்ஷாத் இதுபோன்று ஒரு வார்த்தையை குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும்போதும் ஒருவேளை இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கிறார்களோ என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.