Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெரிய வெளியீடுகள், ஆரம்பித்து வைக்கும் 'இந்தியன் 2'

09 ஜூலை, 2024 - 01:15 IST
எழுத்தின் அளவு:
Indian-2-to-launch-big-releases


2024ம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 115 படங்கள் வந்தாலும், நான்கே நான்கு படங்கள்தான் முற்றிலும் லாபகரமான படங்களாக அமைந்தது. அதிலும் இரண்டு படங்கள் மட்டுமே 100 கோடி வசூலைக் குவித்தது.

அடுத்த ஆறு மாத காலங்களில் ஹீரோக்களுக்கு மட்டுமே 100 கோடிக்கும் அதிகமான சம்பளத்தைக் கொடுத்த படங்கள் வர உள்ளன. 'இந்தியன் 2, தி கோட், வேட்டையன், விடாமுயற்சி' என 100 கோடி சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் படங்கள் அடுத்தடுத்து வர உள்ளன. அவர்களுடைய சம்பளம் போக மீதி எத்தனை 100 கோடிகளில் படங்கள் தயாராகி இருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்படியான பெரிய வெளியீடுகளில் முதலாவதாக 'இந்தியன் 2' படம் இந்த வாரம் ஜுலை 12ம் தேதி வெளியாக உள்ளது. பெரும் நட்சத்திரக் கூட்டத்துடன் உருவாகியுள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் மட்டுமே சுமார் 800 கோடி என்கிறார்கள்.

ஷங்கரின் பிரம்மாண்டம், அனிருத்தின் அதிரடியான இசை, கமல்ஹாசன் அனுபவ நடிப்பு என 28 வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு படத்தின் இரண்டாவது படமாக வருகிறது 'இந்தியன் 2'. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை இந்தப் படம் பூர்த்தி செய்யும் என்பது திரையுலகினரின் எதிர்பார்ப்பு. இன்னும் இரண்டு நாட்களில் அதற்கான விடை தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் ஜோடியாகும் அதிதிதம்பியை தொடர்ந்து அண்ணனுக்கும் ... 'இந்தியன் 2' குழுவினரைப் பாராட்டிய தெலங்கானா முதல்வர் 'இந்தியன் 2' குழுவினரைப் பாராட்டிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)