டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து வருகிறார்கள். விக்னேஷ் சிவன், நயன்தாராவை பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபடுத்தி வருகிறார். ஒரு பிரபல டீ செயின் கம்பெனியின் பங்குதாரராக இருக்கும் நயன்தாரா, பெண்களின் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் மலேசியன் கம்பெனி ஒன்றிலும் பங்குதாரராக இருக்கிறார். இதோடு ஒரு நாப்கின் பிராண்ட் கம்பெனியிலும் இணைந்திருக்கிறார்.
தற்போது தான் இணைந்துள்ள நாப்கின் கம்பெனியின் விளம்பரத்தை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம் நூதன முறையில் விளம்பரம் செய்து வருகிறார். அந்த நாப்கினுடன் தான் இருக்கும் படத்தை வெளியிட்டு அவர் எழுதியிருப்பதாவது: "ஒரு பெண் ஒரு மாதத்தில் பலவிதமான நிலைகளை கடக்க வேண்டியிருக்கிறது. மாதவிடாய் காலங்களில் ஏற்கனவே பலவிதமான ஹார்மோன் மாற்றங்களை சந்தித்துவரும் நாம் நேசிக்கப்படுவதற்கும் ஆறுதல் படுத்தப்படுவதற்கும் ஏங்குகிறோம். நான் எனது கம்பெனி சானிடரி நாப்கின் உபயோகித்து வசதி கண்டுள்ளேன்.
அதே போல் நீங்களும் உங்களுக்கு வசதியான சவுகரியத்தை ஏற்படுத்தும் சானிடரி நாப்கின் ஒன்றினை தேர்வு செய்யுங்கள். இதை நான் இந்தத் தயாரிப்புடன் சம்மந்தம் இருப்பதால் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது எனக்கு மிகவும் நன்றாக வேலை செய்ததால் சொல்கிறேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரச்னையில்லாத சவுகரியமான மாதவிடாய் காலம் அமைய வாழ்த்துகிறேன். மாதத்தின் மற்ற நேரத்தைப்போல இந்த நேரமும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.
பெண்கள் மீதான இந்த திடீர் விளம்பர அக்கறையை சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.




